நடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்

சென்னை: பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் உள்ளனர். அபினய்யின் மனைவியும் ஒரு மருத்துவர்தான்.

கார்த்திக் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது தானாகவே உயிரை மாய்த்துக்கொண்டாரா என்று போலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அபினய் பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தவர். அவரது மனைவி சென்னையில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனை மருத்துவக் கல்லூரி யில் உதவிப் பேரசிரியையாகப் பணி யாற்றி வருகிறார்.

தனது அம்மா வாணிஸ்ரீயைப் போலவே அபினய்யும் காதல் திரு மணம் செய்துகொண்டவர்தான்.

இந்நிலையில், ஒருசில மாதங் களுக்கு முன்பு சொத்தைப் பிரிப்ப தில் குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதில் அப்பா- மகன் ஒரு தரப்பாகவும் அம்மா-மகள் ஒரு தரப்பாகவும் இருந்தபடி பிரச்சினை வந்துள்ளது. அதனால் சொத்துப் பிரச்சினை தந்த மன அழுத்தத்தால் இப்படி நடந்திருக்க லாம் என்றும் நம்பத் தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஒருசிலர் அபினய் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள தாகவும் கூறுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு பெங்க ளூருவில் இருந்து வந்த அபினய் சென்னைக்கு வராமல், அப்பா கரு ணாகரன் இருக்கும் திருக்கழுக் குன்றம் இல்லத்திற்குச் சென்றுள் ளார். அபினய் மரணத்துக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை.

வாணிஸ்ரீக்கு இரு குழந்தைகள். உயிரிழந்த அபினய வெங்கடேஷ் கார்த்திக் (படம்) என்ற மகனும் அனுபமா என்ற மகளும் இருந்தனர். இருவருமே மருத்து வர்கள்தான்.