விதி மீறிய மதுக்கடை ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்

சென்னை: ஊர­டங்­கு உத்தரவின் காரணமாக தமி­ழ­கத்­தில் டாஸ்­மாக் மதுக்­க­டை­கள் மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணி­யு­டன் மூடப்­பட்­டன. அன்று விற்­ப­னை­யான பணத்தை பணி­யா­ளர்­கள் வங்­கி­யில் மறு­நாளன்று செலுத்­தி­னர். மது­பாட்­டில்­கள் கடை­க­ளி­லேயே இருப்பு வைக்­கப்­பட்­டன. பல இடங்­களில் திருட்டு, முறை­கே­டாக மது விற்­பனை போன்ற சம்­ப­வங்­களும் நடந்தேறின.

ஊர­டங்­கும் அடுத்­த­டுத்து நீட்­டிக்­கப்­பட்­ட­தால் மது­பாட்டில்­களை டாஸ்­மாக் நிர்­வா­கமே கிடங்­குக்கு மாற்­றி­யது. அப்­போது ஒப்­ப­டைக்­கப்­பட்ட மது­வுக்­கும் மார்ச் 24ல் கடை­கள் அடைக்­கப்­பட்­ட­போது காட்­டப்­பட்ட இருப்­புக்­கும் வித்­தி­யா­சம் இருந்­தது.

இந்த வித்­தி­யா­சத் தொகையை வங்­கி­யில் செலுத்­தும்­படி நிர்­வா­கம் உத்­த­ர­விட்­ட­தன் பேரில் பணி யாளர்­கள் செலுத்­தி­னர்.

இது­கு­றித்து டாஸ்­மாக் பணி­யா­ளர்­கள் கூறு­கை­யில், “தமி­ழ­கத்­தி­லுள்ள 5,300 கடை­களில் 95% கடை­களில் இருப்­புக் குறைவு உள்ளது. சில கடை­களில் ரூ.12 லட்­சம் வரை இருப்­புக் குறைவு இருந்­துள்­ளது. இக்­கடை பணி­யா­ளர்­கள் ரூ.7 லட்­சத்­துக்­கும் அதி­க­மாக செலுத்தவேண்­டும். மதுரை மாவட்­டத்­தில் மட்­டும் இத்­தொகை ரூ.20 கோடி­யைத் தாண்­டும். மாநி­லம் முழு­வ­தும் ரூ.200 கோடிக்­கும் மேல் அர­சுக்கு வருமானம் கிடைக்­கும். இத்­தொ­கையை வசூ­லித்த பின்னரும் ஊழி­யர்­கள் மீது துறை ரீதி­யாக வேறு நடவடிக்கை எடுக்­கா­மல் இருக்கவேண்­டும்,” என்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!