ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டனம், ஆதரவு; தமிழக அரசுக்கு சம்பந்தமில்லை என மறுப்பு ஜூன் 1 வரை இடைக்கால பிணை

சென்னை: சென்னை எழும்­பூர் நீதி மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப் பட்ட ஆர்.எஸ். பார­திக்கு ஜூன் 1 வரை இடைக்­கால பிணை அளித்து நீதி­பதி செல்­வ­கு­மார் உத்­த­ர­விட்­டார்.

திமுக அமைப்­புச் செய­லா­ள­ரும் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான ஆர்.எஸ்.பார­தியை நேற்று அதிகாலை ஆலந்­தூ­ரில் உள்ள அவ­ரது வீட்­டில் போலிசார் கைது செய்­த­னர்.

இதன்­பின்­னர் செய்­தி­யா­ளர் களி­டம் பேசிய பாரதி கூறு­கை­யில், “நான் பேசி­யது சமூக ஊட­கங்­களில் திரித்­துக் கூறப்­பட்­டுள்­ளது.

“கோவை­யில் கொரோனா தடுப்­புப் பொருட்­கள் வாங்­கி­ய­தில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்­துள்ளதாக துணை முதல்­வர் ஓ.பன்­னீர் செல்­வம் மீது புகார் அளித்­தேன்.

“இந்­நி­லை­யில் யாரையோ திருப்திப்­ப­டுத்­து­வ­தற்­காக என் மீது இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ள­னர்.

“இதற்­கெல்­லாம் பயந்­து­விட மாட்­டோம். கொரோனா விவ­கார ஊழல் பற்றி தொடர்ந்து புகார் அளிப்­போம்,” என்று கூறி­னார்.

கடந்த பிப்­ர­வரி 15ஆம் தேதி பட்­டி­ய­லின மக்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் பாரதி பேசி­ய­தாக சர்ச்சை எழுந்­ததை அடுத்து, அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் ஆதித்­த­மி­ழர் மக்­கள் கட்­சித் தலை­வர் கல்­யாண் குமார் அளித்த புகா­ரின் அடிப்­படை யில் பாரதி கைது செய்­யப்­பட்­ட­தாக போலி­சார் கூறி­னர்.

ஆர்.எஸ். பாரதி கைதுக்கு பல்­வேறு தலை­வர்­களும் கண்­ட­னம் தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்த கைது நட­வ­டிக்­கையை வர­வேற்ப தாக பாஜக தேசிய பொதுச் செய லாளர் எச்.ராஜா தெரி­வித்­துள்­ளார்.

பார­தியை அடுத்து காத்­தி­ருப்பு பட்­டி­ய­லில் தயா­நி­தி­மா­றன் உள் ளாரா? என்­றும் கேட்­டுள்­ளார்.

திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், “கொரோனா கிரு­மி­யைப் பர­வா­மல் தடுப்­ப­தில் தமி­ழக அரசு தோல்வி அடைந்­துள்­ளதை மூடி மறைக்­கவே இந்த கைது நட­வ­டிக்கை எடுக்­கப் பட்­டுள்­ளது.

“இது­போன்ற நள்­ளி­ரவு கைது நாட­கங்­க­ளைப் பார்த்து ஒரு­போ­தும் திமுக மிர­ளாது,” என்று குறிப் பிட்­டுள்­ளார்.

பார­தி­யைக் கைது செய்­த­தன் மூலம் எதிர்க்­கட்­சி­க­ளின் குரல் வளையை நெரிக்­க­லாம் என அதி­முக அரசு மனப்­பால் குடித்து வரு­வ­தாக மதி­முக பொதுச் செய லாளர் வைகோ கூறி­யுள்­ளார்.

உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் குறித்து அவ­ம­திக்­கும் வகை­யில் கீழ்த்­த­ர­மான சொல்­லைப் பயன்­ப­டுத்­திய பாஜ­க­வின் தேசிய செய­லா­ளர் எச்.ராஜாவை அதி­முக அரசு கைது செய்­ததா என கேள்வி எழுப்­பி­யுள்ள திரா­விட கழ­கத் தலை­வர் கி.வீர­மணி, இது ஒரு மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்கை என்­றார்.

இதற்­கி­டையே பாரதி கைதுக்­கும் தமி­ழக அர­சுக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை, சட்­டத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளது என்று தமி­ழக முதல்­வர் கே.பழ­னி­சாமி விளக்கம் தந்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்தேன். இதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நிற்காது. ஊழல் குறித்த புகார் விடாமல் தொடரும்.