ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோ ஓட்ட அனுமதி

சென்னை: சென்­னை­யைத் தவிர தமி­ழ­கம் எங்­கும் ஆட்டோ, சைக்­கிள் ரிக்­‌ஷாக்­களை ஒற்றை பய­ணி­யு­டன் ஓட்­டு­வ­தற்கு வாகன ஓட்டிகளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், ஆட்டோ, ரிக்‌ஷா வாகன ஓட்­டி­களும் அதில் பய­ணம் செய்­யும் பய­ணியும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்பது கட்டாயம் என்­றும் வாகனங்களில் பய­ணி­கள் பயன்­படுத்­தும் வகை­யில் கிரு­மி­நா­சி­னி­­ வைத்­தி­ருப்பது அவசியம் என்றும் தமிழக அரசு அறி­வு­றுத்தி உள்ளது.

வாகன அனுமதி தொடர்பாக தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், “பொது­மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கருத்­தில் கொண்டு, சில பாது­காப்பு வழி­முறை­க­ளு­டன் பல்­வேறு தளர்­வு­கள் அறி­விக்கப்பட்டு வரு­கின்றன.

“இப்­போது சென்னை மாந­க­ராட்சி காவல் எல்­லை­யைத் தவிர தமிழ்­நாடு முழு­வ­தும் ஆட்டோ, சைக்­கிள் ரிக்‌ஷா வாக­னங்­களை ஓட்­டுநருடன் ஒரு பயணி மட்­டும் பய­ணிக்­கும் வகை­யில் நேற்று சனிக்கிழமை முதல் தின­மும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை மட்­டும் இயக்க அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது.

“நோய்க் கட்­டுப்­பாட்டு பகு­தி­களில் ஆட்டோ, ரிக்‌ஷாக்களை இயக்கக் கூடாது. வாகனங்களை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவி சுகாதாரத்தை பேண வேண்டும்,” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பயணியின் வருகைக்காக ஆட்டோ நிறுத்தும் இடத்தில் காத்திருக்கும் ஆட்டோ வாகனங்கள்.

படம்: ஊடகம்