சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பணி ஆற்றுவோம்

சென்னை: உயிர்க்கொல்லியான கொரோனா கிருமித் தொற்று மேலும் பரவாமல் தடுக்க ஒருங்கி ணைந்த திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

“நாம் அனை­வ­ரும் ஒற்றுமை வேற்றுமை பார்க்காமல் ஒன்­றி­ணைந்து, அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்டு ஒருங்­கி­ணைந்து நமது மக்­கள் நல்­வாழ்­வுக்­கான கட­மையை நிறை­வேற்­று­வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொளிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருடனும் கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்கான கடமையை நிறை வேற்றுவோம். இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உதவிகளும் வழங்கு வது; சரியான கேள்விகளைக் கேட்டு அரசைப் பொறுப்புக்குள் ளாக்குவது என எதிர்க்கட்சித் தலைவர்களாக நமக்கு இரு முக்கிய பணிகள் உள்ளன. இந்த கொரோனா கிருமி காலகட்டத்தில் திமுகவும் நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள் வதில் முழுமையாக ஈடுபட்டு வரு கிறோம்,” என்று கூறினார்.

இதற்கிடையே, அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்காமல், மக்களைப் போராட்டத்துக்கு தூண்டிவிடும் வேலையை ஸ்டாலின் செய்துவருகிறார் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண் ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

காணொளிக் காட்சி வழியாக நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற காட்சி.

படம்: ஊடகம்