இன்று முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

1 mins read
8ff1fdae-7fdb-4430-bc09-d1de3cc0aa52
வேலை கிடைக்காமல் திண்டாடி வரும்  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை அதிகரித்து வழங்கும்  வகையில் தென்மாவட்டங்களில் ஆறு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா ஊர­டங்கு உத்­த­ர­வால் முடக்­கப்­பட்­டி­ருந்த தொழிற்­பேட்­டை­கள் பொது­மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைக் கருத்­தில் கொண்டு, மீண்­டும் இன்­று­மு­தல் உயிர்­பெற உள்­ளன.

சென்­னை­யில் கிண்டி, அம்­பத் தூர் உள்­ளிட்ட இடங்­க­ளைச் சேர்ந்த 17 தொழிற்­பேட்­டை­கள் உட­ன­டி­யாக செயல்­ப­டு­வ­தற்கு தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இந்த தொழிற்­பேட்­டை­களில் 25% தொழி­லா­ளர்­கள் மட்­டுமே பணி­பு­ரிய வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. இதற்­கான அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு நேற்று வெளி­ யிடப்­பட்­டது.

தொழிற்­பேட்­டை­களில் கடைப் பிடிக்க வேண்­டிய விதி­மு­றை­கள் குறித்து தமி­ழக அரசு உத்­த­ரவு களைப் பிறப்­பித்­துள்­ளது.

தொழி­லா­ளர்­க­ளின் உடல்­வெப்ப நிலையை தின­மும் சோதிக்க வேண்­டும். தொழிற்­பேட்­டை­களில் பணி புரி­யும் தொழி­லா­ளர்­கள் அனை­வரும் முகக்­க­வ­சம், கையுறை கட்­டா­யம் அணி­ய­வும் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­க­வும் வேண்­டும்.

தின­மும் காலை, மாலை­யில் தொழிற்­சா­லையை கிருமி நாசினி தெளித்து சுத்­தப்­ப­டுத்த வேண்­டும்.

தொழிற்­சா­லை­யில் உள்ள கழி வறையை தின­மும் 2 மணி நேரத்­திற்கு ஒரு­முறை கிருமி நாசி­னி­யைக் கொண்டு சுத்­தம் செய்­வதை உறுதி செய்­ய­வேண்­டும்.

சோப்பு, கிருமி நாசினி பயன் படுத்தி அடிக்­கடி கைக­ளைக் கழு­வும் நடை­மு­றை­யைப் பின்­பற்ற வேண்­டும்.

55 வய­துக்கு மேற்­பட்ட தொழி லாளர்­கள் பணிக்கு வரு­வதைத் தவிர்க்­க­வேண்­டும்.

தொழி­லா­ளர்­க­ளுக்கு காய்ச்­சல், சளி, இரு­மல் போன்ற அறி­கு­றி­கள் இருந்­தால் விடுப்பு அளிக்­க­வும் அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.