தமிழகத்திற்கு நான்கு சிறப்பு ரயில்களை விடும்படி மத்திய அரசிடம் வேண்டுகோள்

தமிழகத்திற்கு நான்கு சிறப்பு ரயில்களை விடும்படி மத்திய அரசிடம் வேண்டுகோள்

1 mins read
e93f7aad-8d48-4fdc-822b-60acfd672984
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­திற்கு குளிர் சாதன வசதி செய்­யப்­ப­டாத நான்கு சிறப்பு ரயில்­களை விடக்­கோரி மத்­திய அர­சுக்கு தமி­ழக அரசு கடி­தம் எழு­தி­யுள்­ளது.

ரயில் சேவை­களை கோவை- மயி­லா­டு­துறை, மதுரை-விழுப்­பு­ரம், திருச்சி-நாகர்­கோ­வில், கோவை- காட்­பாடி இடையேயான வழித்­தடங்­களில் இயக்­கு­மாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிரு­மியின் தாக்­கம் தமி­ழ­கத்­தில் அதி­க­ரித்து இருப்­ப­தால் சிறப்பு ரயில்­கள் தமி­ழ­கத்­திற்கு இயக்­கப்­பட வேண்­டாம் என தமி­ழக அரசு ஏற்­கெ­னவே மத்­திய அர­சி­டம் கேட்­டுக்­கொண்­டது.

இதை­ய­டுத்து சென்­னைக்கு ரயில்­கள் இயக்­கப்­ப­ட­வில்லை.

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சென்­னை­யைத் தவிர்த்து நாடு முழு­வ­தும் உள்ள முக்­கிய நக­ரங்­க­ளுக்கு இடையே 200 ரயில்­கள் இயக்­கப்­பட உள்­ளன.

இந்­நி­லை­யில், 4 சிறப்பு ரயில்­களை இயக்­கக் கோரி தமி­ழக அரசு தெற்கு ரயில்­வேக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளது. இந்­தக் கடி­தத்தை ரயில்வே வாரி­யத்­துக்கு தெற்கு ரயில்வே அனுப்பி வைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து, அடுத்­த­டுத்து ரயில்வே அமைச்­ச­கம் அறி­விக்க உள்ள பய­ணி­கள் சிறப்பு ரயில்­களில், தமி­ழ­கத்­திற்கு நான்கு சிறப்பு ரயில்­கள் இடம்­பெற வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.