தமிழகத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 1,143 ஆகக்கூடின

தமிழகத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 1,143 ஆகக்கூடின

1 mins read
d207ca30-b397-44bd-97a7-b74173a2044e
சென்னையில் கொரோனா கிருமித்தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாநகரின் எல்லா இடங்களிலும் கிருமிநாசினி அடித்து அன்றாடம் அதிகாரிகள் சுத்தப் படுத்துகிறார்கள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தாறு­மா­றா­கக் கூடி­வ­ரு­வ­தன் கார­ண­மாக அந்த மாநி­லத்­தில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வட்­டா­ரங்­க­ளின் எண்­ணிக்கை 1,143 ஆக அதி­க­ரித்­து­விட்­டது.

சென்­னை­யில் மட்­டும் அத்­த­கைய 635 மண்­ட­லங்­கள் இருப்­ப­தா­க­வும் திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் ஏறக்­கு­றைய 225 கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வட்­டா­ரங்­கள் உள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

இதர எல்லா மாவட்­டங்­க­ளி­லும் இத்­த­கைய பகு­தி­க­ளின் எண்­ணிக்கை 30க்கும் குறைவு என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

தமிழ்­நாட்­டில் புதி­தாக கொரோனா கிருமி தொற்­று­வோரின் எண்­ணிக்கை தொடர்ந்து அச்­ச­மூட்­டும் வகை­யில் கூடி வரு­கிறது. நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி மொத்­தம் 16,277 பேரைக் கிருமி தொற்றி இருந்­த­தாக மாநி­லத்­தின் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டும் புதி­தாக 765 பேரைக் கிருமி தொற்­றி­யது. எட்டு பேர் மாண்­டு­விட்­டார்­கள். மொத்­தம் 111 பேரைக் கொரோனா கிருமி கொன்­று­விட்­டது. புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் சுமார் 47 பேர் வெளி­மாநி­லங்­களில் இருந்து வந்­த­வர்­கள்.

இத­னி­டையே, சென்­னை­யில் கிரு­மித்­தொற்று அதி­க­மாக இருப்­ப­தால் அங்கு சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று மத்­திய அர­சாங்­கம் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கிறது.

சென்­னை­யில் 200 கர்ப்­பி­ணி­கள் உட்­பட 10,576 பேரைக் கிருமி தொற்றி இருக்­கிறது. ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டும் 833 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர்.

இது­வரை மொத்­தம் 8,324 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். 5,643 பேர் சிகிச்­சை பெற்று வரு­கி­றார்­கள். இது­வ­ரை­ 409,615 ரத்த மாதிரிகள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றில் 392,601 மாதி­ரி­களில் தொற்று இல்லை என்­பது தெரி­ய­வந்­துள்ளது.