9 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி: சாதித்த 2வது கட்சி அதிமுக

9 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி: சாதித்த 2வது கட்சி அதிமுக

2 mins read
f00a7a8c-89d9-4faf-b69c-bb5fda4309fa
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், திரையரங்குகளை மூடுவதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் காங்­கி­ரஸ் கட்­சிக்­குப் பிறகு தொடர்ந்து அதிக காலம் பதவி வகிக்­கும் கட்சி என்ற சாத­னையை அதி­முக நிகழ்த்தி இருக்­கிறது.

அதி­முக அர­சாங்­கம் இப்­போதைய பதவிக் காலத்­தின் ஐந்­தா­வது ஆண்­டில் சனிக்­கி­ழமை காலடி எடுத்து வைத்­தது. அந்த அரசு தொடர்ந்து ஒன்­பது ஆண்டு­களுக்­கும் அதிக காலம் பதவி வகித்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் தொடர்ந்து 20 ஆண்­டு­கா­லம் பதவி வகித்­துள்ள கட்சி காங்­கி­ரஸ் கட்சி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதி­முக, 2011 மே 16ஆம் தேதி நடந்த தேர்­த­லில் ஆட்­சி­யைப் பிடித்­தது. நான்­கா­வது தட­வை­யாக ஜெய­ல­லிதா முதல்­வரா­கப் பதவி ஏற்­றுக்­கொண்­டார்.

2016 மே மாதம் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் அதிமுக வென்­றது. ஜெய­ல­லிதா 2016 மே 23ஆம் தேதி ஆறா­வது தட­வை­யாக முதல்­வர் பத­வியை ஏற்­றுக்­கொண்­டார். அது முதல் அதி­முக ஆட்சி நடந்து வரு­கிறது.

இப்போது மேலும் ஓர் ஆண்டு பத­விக்­கா­லம் எஞ்சி இருக்­கிறது. 2016 டிசம்­ப­ரில் ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு ஓ. பன்­னீர்­செல்­வம் மூன்­றா­வது முறை­யாக முதல்­வர் பத­வியை ஏற்று 2017 பிப்­ர­வரி 15 வரை அந்­தப் பத­வியை வகித்­தார். அதற்­குப் பிறகு முதல்­வ­ரான எடப்­பாடி பழ­னி­சாமி இன்­ன­மும் அந்­தப் பத­வி­யில் தொடர்ந்து வரு­கி­றார்.

அதி­மு­கவை தொடங்­கிய எம்ஜிஆர், 1977ல் ஜூன் மாதத்­திற்­கும் 1987 டிசம்­ப­ருக்­கும் இடை­யில் முதல்­வ­ராக பதவி வகித்­தார். என்­றா­லும் 1980 பிப்­ர­வரி முதல் ஜூன் வரை தமி­ழ­கத்­தில் அதி­முக ஆட்சி நடக்­க­வில்லை. அப்­போது அதி­பர் ஆட்சி நடந்­தது.

இதற்­கெல்­லாம் முன்­பாக 1946 மார்ச்-ஏப்­ரல் மாதங்­களில் தமி­ழ­கத்­தில் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யைப் பிடித்­தது. 1967 மார்ச் வரை காங்­கி­ரஸ் ஆட்சி தொடர்ந்­தது. 1967ல் திமுக ஆட்­சிக்கு வந்­தது.

1946 முதல் 1952 வரை டி. பிர­கா­சம், ஓமந்­தூர் பி. ராம­சாமி ரெட்­டி­யார், பி.எஸ் குமா­ர­சாமி ராஜா ஆகி­யோர் முதல்­வர்­க­ளா­கப் பதவி ஆற்­றி­னர். சுதந்­தி­ரத்­திற்­குப் பிறகு 1952 பிப்­ர­வ­ரி­யில் முதல் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்­தது.

அதில் வெற்றி பெற்ற காங்­கிரஸ் அடுத்த 15 ஆண்­டு­களில் ராஜாஜி, காம­ரா­ஜர், பக்­த­வக்­ச­லம் ஆகி­யோரை முதல்­வ­ராக்­கியது.

பிறகு 1967 மார்ச் மாதம் பத­வி­யைப் பிடித்த திமுக 1976 வரை பதவி வகித்­தது.

இடை­யில் 1971 மார்ச்­சில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்­தது. அந்­தக் கால­கட்­டத்­தில் சி.என். அண்­ணா­து­ரை­யும் மு. கரு­ணா­நி­தி­யும் முதல்­வர்­க­ளாக இருந்­தனர். ­

பிறகு 1989 முதல் 2011 வரை திமுக அல்­லது அதி­முக ஆட்சி பதவி வகித்­தது. இந்­தப் போக்கு 2016ல் முடி­வுக்கு வந்­தது.

இத­னி­டையே, அடுத்த ஆண்டு நடக்­க­வி­ருக்­கும் தேர்­த­லில் ஆட்சி­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள அதி­மு­க­வும் மறு­ப­டி­யும் ஆட்­சி­யைப் பிடிக்க திமு­க­வும் மும்முரமாக முயன்று வரு­கின்­றன.

இதற்­கான வியூ­க­மாக போட்டி போட்­டுக்­கொண்டு அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளைக் அவை களம்­இறக்­கு­கின்­றன.

திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.