கடைசி ஜமீன் காலமானார்

1 mins read
32797967-b953-4c77-bd8e-af7057bf7338
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம்கொண்ட சிங்கம்பட்டியின் 31வது ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தனது 92வது வயதில் அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். படம்: ஊடகம் -

சிங்கம்பட்டி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம்கொண்ட சிங்கம்பட்டியின் 31வது ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தனது 92வது வயதில் அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். தென் இந்தியா வில் எஞ்சியிருந்த பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்பட்டவர் இவரே. (கோப்புப்படம்)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி, கடந்த 74 ஆண்டுகளாக ராஜ உடையில் காட்சியளித்து வந்துள்ளார்.

இவருடைய வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சீமராஜா என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

கடந்த 1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை இந்த ஜமீன் ஆளுமையின் கீழ் 74,000 ஏக்கர் நிலங்கள் இருந்தன.

ஆனால் எல்லாம் போய் அரண்மனையில் இப்போது 10க்கும் குறைவானவர்களே பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.