மருத்துவமனையில் ஓபிஎஸ்

1 mins read
9b774c3b-fd97-4116-94ff-f6602c064cfe
-

சென்னை: தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.

இதன் தொடர்பில் 'எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை' நேற்று வெளியிட்ட அறிக்கையில், "துணை முதல்வருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று (நேற்று) காலை அவரின் சோதனை முடிவுகளை ஒரு மருத்துவக் குழு ஆராய்ந்தது. இன்று (நேற்று) மாலையே அவர் வீடு திரும்புவார்," எனக் கூறப்பட்டிருந்தது.