திருப்பரங்குன்ற முருகன் கோவில் வாசலில் 38 திருமணங்கள்

திருப்பரங்குன்ற முருகன் கோவில் வாசலில் 38 திருமணங்கள்

1 mins read

மதுரை: கிருமித்தொற்று காரணமாக நடப்பிலுள்ள ஊரடங்கால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. அவ்வகையில், அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழும் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலும் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட 38 மணமக்கள் நேற்று முன் தினம் மலைக்குன்ற முருகன் கோவில் வாசலில் எளிமையாக மணமுடித்துச் சென்றனர்.