திருமணச் செலவைக் குறைத்து நிதி வழங்கிய புதுமணத் தம்பதியர்

விரு­துநகர்: திரு­ம­ணத்­தின்போது வீண் செல­வு­க­ளைக் குறைத்து அதன் மூலம் 50 ஆயி­ரம் ரூபாய் மிச்­சப்­ப­டுத்­திய புது­ம­ணத் தம்­ப­தி­யர் அதை கொரோனா நிதி­யாக வழங்கி பாராட்­டு­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

விரு­து­ந­க­ரைச் சேர்ந்த கபில்­ராஜ் ஆதித்யா, சப்­தமி ஆகிய இரு­வ­ருக்­கும் அண்­மை­யில் திரு­ம­ணம் நடை­பெற்­றது. பெரி­ய­ள­வில் நடை­பெற இருந்த திரு­ம­ணம் ஊர­டங்கு கார­ண­மாக எளி­மை­யாக நடந்­தே­றி­யது.

முன்­ன­தாக வீண், ஆடம்­பர ஏற்­பா­டு­க­ளைத் தவிர்க்­கு­மாறு மண­மக்­கள் இரு­வ­ரும் தங்­கள் குடும்­பத்­தா­ரி­டம் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

“தின­மும் பல்­வேறு தரப்­பி­னர் ஆத­ர­வற்­றோ­ருக்கு உண­வ­ளிப்­பது, ஏழை­க­ளுக்­கு காய்­கறி, மளி­கைப் பொருட்­கள் வாங்­கித் தரு­வது என ஏதே­னும் ஒரு­வ­கை­யில் சேவை­யாற்றி வரு­வதை கேள்­விப்­பட்­டோம். எனவே நம் பங்­க­ளிப்­பும் இருக்­கட்­டும் என முடி­வெ­டுத்து திரு­ம­ணச் செல­வு­க­ளைக் குறைத்­தோம்,” என்­கி­றார் சப்­தமி.

இவ்வாறு மிச்சப்படுத்திய 50 ஆயிரம் ரூபாயை திருமணம் முடிந்த அடுத்த ஒருமணி நேரத்தில் மணக்கோலத்துடன் சென்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இப்புதுமணத் தம்பதியர் ஒப்படைத்தனர்.

“எங்களைப் போல் ஊரடங்கு வேளையில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்,” என்கிறார் கபில்ராஜ் ஆதித்யா.