சுடச் சுடச் செய்திகள்

சென்னையில்ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 17 ஆயி­ரத்தை எட்­டி­யுள்ள நிலை­யில் சென்­னை­யில் மட்­டும் 11 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் மட்­டும் புதி­தாக 805 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை நோய்த்­தொற்­றைக் கண்­ட­றிய மிக அதி­க­மா­னோ­ருக்கு பரி­சோ­தனை செய்த மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் உள்­ளது. பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யு­டன் குண­ம­டை­வோ­ரும் அதி­க­ரித்து வரு­வது கவ­னிக்­கத்­தக்­கது. இது­வரை 8,731 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை 118 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். எனி­னும் உயி­ரி­ழப்பு விகி­தம் 0.69 விழுக்­கா­டாக, ஆகக் குறைந்த அள­வில் உள்­ளது.

இதற்­கி­டையே மாநி­லத்­தில் பொது போக்­கு­வ­ரத்து துவங்­கு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்டு வரும்­நி­லை­யில், ரயில் போக்­கு­வ­ரத்­தும் விரை­வில் துவங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சென்னை தவிர்த்து, மதுரை, கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்தை விரைவில் துவக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனியார் பேருந்து போக்குவரத்தும் குறிப்பிட்ட வழித்தடங்களில் அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என நேற்று மாலை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon