25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: உள்­நாட்டு விமா­னப் போக்­கு­வ­ரத்தை தொடங்­கி­யுள்ள நிலை­யில் தமி­ழ­கத்­தில் நில­வும் சூழ்­நி­லைக்கு ஏற்ப சில கட்­டுப்­பாடு­க­ளு­டன் விமா­னங்­களை இயக்க முடிவு செய்­துள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய விமானப் போக்­கு­வ­ரத்­துத் துறை செய­லர் பிரதீப் ­சிங் கரோ­லா­வுக்கு தமி­ழக தலை­மைச் செய­லா­ளர் கே.சண்முகம் கடி­தம் ஒன்றை அனுப்­பி­யுள்­ளார்.

அதில், சென்னை விமான நிலை­யத்­துக்கு நாளொன்­றுக்கு வரும் உள்­ளூர் விமா­னங்­க­ளின் எண்­ணிக்கை 25ஆக கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் கோவை, திருச்சி, மதுரைக்கு விமா­னங்­களை இயக்­க­லாம் என்­றும் கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள குஜ­ராத், மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் இருந்து சென்னை வரும் விமா­னங்­களை அனு­ம­திப்­ப­திற்கு மிகக்­கு­றை­வான வாய்ப்பே உள்­ளது என்­றும் தமி­ழக தலை­மைச் செய­லர் தெரி­வித்­துள்­ளார்.

அதே­ச­ம­யம் தமி­ழ­கத்­தில் இருந்து மற்ற இடங்­க­ளுக்­குச் செல்­லும் விமா­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் எந்த நிபந்­த­னை­களும் இல்லை என்று அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே சேலத்­தில் இருந்து விமா­னங்­களை இயக்க மத்­திய அரசு அனு­ம­தித்­ததை அடுத்து நேற்று அங்­கி­ருந்து சென்­னைக்­கான விமா­னச்­சேவை தொடங்­கி­யது. இத­னால் சேலத்­தைச் சேர்ந்த தொழில் முனை­வோ­ரும் வணி­கர்­களும் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!