88 விழுக்காட்டினருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி தெரியவில்லை: அமைச்சர் தகவல்

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், நோய்த்­தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் சுமார் 88 விழுக்­காட்­டி­ன­ருக்கு அதற்­கான அறி­கு­றி­கள் அறவே தென்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், சென்­னை­யில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 11 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது என்­றார்.

“தமி­ழ­கத்­தில் இது­வரை ‘கொவிட்-19’ நோயில் இருந்து 8,731 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். உயிரிழப்பு 118ஆக அதி­க­ரித்­துள்­ளது.

“இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் தான் கொரோனா கிரு­மித்­தொற்றை கண்­ட­றிய அதி­க­பட்ச பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதே சம­யம் ஒட்­டு­மொத்த பாதிப்­பில் வெறும் 12 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே நோய்த்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டன,” என்­றார் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர்.

இது மருத்­துவ நிபு­ணர்­க­ளுக்கு கவலை அளித்­துள்­ளது.

எந்த வய­தி­ன­ருக்கு, என்ன மாதி­ரி­யான அறி­கு­றி­கள் தென்­பட்­டன, எத்­தனை பேருக்கு அவ்­வாறு இருந்­தது என்­பது குறித்­தும் அமைச்­சர் விளக்­க­மாக எடுத்­து­ரைத்­தார்.

தமி­ழ­கத்­தில்­தான் உயி­ரி­ழப்பு விகி­தம் குறை­வாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், இது­வரை உயி­ரி­ழந்­த­வர்­களில் ஆண்­கள் 81 பேர் என்­றும் பெண்­கள் 37 பேர் என்­றும் தெரி­வித்­தார். மேலும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் வய­தா­னோர், நீரி­ழிவு, ரத்த அழுத்­தம் உள்­ளிட்ட நாள்­பட்ட நோய் பாதிப்­புள்ள 84 விழுக்­காட்­டி­னர் தான் உயி­ரி­ழப்­ப­தா­க­வும் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் சுட்­டிக்­காட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!