திருமழிசை சந்தையில் நாள்தோறும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாகின்றன

சென்னை: கோயம்­பேடு மொத்த காய்­க­றிச் சந்­தைக்­குப் பதி­லாக சென்­னைப் புற­ந­கர்ப் பகு­தி­யில் அமைந்­துள்ள திரு­ம­ழிசை சந்தையில் தினந்­தோ­றும் 2 லட்சம் கிலோ மதிப்­புள்ள காய்­க­றி­கள் வீணா­கின்­றன.

இதைத் தடுக்க அரசு உத­விக்­கரம் நீட்ட வேண்­டும் என வியா­பா­ரி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். குறிப்­பாக, காய்­க­றி­களை சேமித்து வைக்க போது­மான வசதி இல்லை என அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிருமித்­தொற்­றுப் பர­வ­லுக்கு கோயம்­பேடு சந்­தை­யும் முக்­கிய கார­ண­மா­கி­விட்­டது. இதை­ய­டுத்து காய்­கறிச் சந்தை திரு­ம­ழி­சைக்கு மாற்­றப்­பட்­டது. இச்­சந்­தைக்கு தினமும் 500 லாரி­களில் காய்­க­றி­கள் வரு­கின்­றன. எனி­னும் ஊர­டங்கு கார­ண­மாக தேவை குறைந்­துள்­ள­தால் காய்­க­றி­கள் விற்­கா­மல் தேங்­கிப் போகின்­றன.

அவற்­றைப் பாது­காக்க திருமழிசை பகுதியில் போது­மான கிடங்­கு­கள் இல்­லா­த­தால் காய்கறிகள் தின­மும் வீணா­வதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.