முடிவுக்கு வந்துள்ளது வாரிசு சர்ச்சை: சொல்கிறார் ஜெ.தீபா

சென்னை: முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாரிசு யார் என்ற சர்ச்­சைக்கு முடிவு வந்­துள்­ளது என்று அவ­ரது அண்­ணன் மகள் ஜெ. தீபா தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், சட்­ட­ரீ­தி­யான விஷ­யங்­கள் முடிந்த பிறகு ஜெயலலிதா­வின் வேதா இல்­லத்­திற்குச் செல்­லப் போவ­தா­கக் குறிப்­பிட்­டார்.

சென்னை உயர்­நீ­தி­மன்­றம் வரலாற்­றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது என்­றார் அவர்.

ஜெய­ல­லி­தா­வின் வேதா இல்லத்தை நினைவு இல்­ல­மாக மாற்­றும் தமி­ழக அர­சின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்­தார் தீபா. அந்த வழக்கு விசா­ர­ணை­யின்போது நீதி­மன்­றம் சில உத்தரவுகளைப் பிறப்­பித்­தது.

ஜெய­ல­லி­தா­வுக்கு நேரடி வாரிசுகள் இல்­லா­த­தால், இந்­திய வாரி­சு­ரி­மைச் சட்­டப்­படி ஜெய­ல­லி­தா­வின் சகோ­த­ர­ரின் வாரி­சு­க­ளான தீபா, தீபக் ஆகிய இரு­வ­ரை­யும் இரண்­டாம் நிலை சட்­டப்­பூர்­வ­மான வாரி­சு­க­ளாக அறி­வித்­துள்­ளது நீதிமன்­றம்.

இந்­நி­லை­யில் ஜெய­ல­லி­தா­வின் 913 கோடி ரூபாய் மதிப்­புள்ள அனைத்து சொத்­து­க­ளுக்­கும் தாங்கள் உரிமை கோர­வில்லை என ஜெ.தீபக் தெரி­வித்­துள்­ளார்.

“நானும் எனது அக்கா தீபாவும் எங்­க­ளது பரம்­ப­ரைச் சொத்­து­களுக்கு மட்­டும்தான் உரிமை கோரி­னோம்.

“உயர் நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வு­கள் குறித்து அக்­கா­வு­டன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்­கப்­படும்,” என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தீபக் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!