மாநகராட்சி அதிரடி: தி.நகர் கடைகளை மூட உத்தரவு

1 mins read
16fc5380-d4eb-481b-8f2d-106f7b5f2e65
படம்: ஊடகம் -

சென்னை: விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாத காரணத்தை அடுத்து சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் கடைகளை உடனடியாக மூடுமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வையொட்டி ரங்கநாதன் தெரு கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

எனினும் கிருமி நாசினி தெளிக்காமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பல கடைகள் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அனைத்து கடைகளையும் மூடுமாறு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோப்புப் படம்: ஊடகம்