தமிழகத்தில் நாளை முதல் பயணிகள் ரயில் சேவை; முன்பதிவு தொடங்கியது

சென்னை: தமி­ழ­கத்­தில் நாளை ஜூன் 1 முதல் கொரோனா கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­ப­டாத மாவட்­டங்­க­ளுக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்­கள் இயங்கு வதற்கு ரயில்வே வாரி­யம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இந்த ரயில் பய­ணங்­க­ளுக்­கான முன்­ப­திவு நேற்று மாலை தொடங்­கி­யது. ஆனால், இந்­தச் சேவை கொரோனா பாதிப்பை அதி­கம் எதிர்­நோக்­கும் சென்­னைக்கு மட்­டும் கிடை­யாது என­வும் ரயில்வே வாரி­யம் கூறி­யுள்­ளது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நடப்­பில் இருந்து வரும் ஊரடங்கு உத்­த­ரவு இன்­று­டன் முடி­வ­டை­கிறது.

இந்­நி­லை­யில், நாளை முதல் நாடு முழு­வ­தும் ரயில் சேவை தொடங்க உள்­ளது.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தி­லும் 4 பய­ணி­கள் ரயில்­களை இயக்கு வதாக தென்­னக ரயில்வே அறி வித்­துள்­ளது.

அதன்­படி கோவை-மயி­லாடு துறை-கோவை, மதுரை-விழுப்­பு­ரம்-மதுரை, திருச்சி- நாகர்­கோ­யில்-திருச்சி, கோவை-காட்­பாடி-கோவை உள்­ளிட்ட நான்கு வழித்­த­டங்­களில் ரயில்­களை இயக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பொதுப் போக்கு வரத்­துக்கு அரசு அனு­மதி அளிக்­கும்பட்­சத்­தில் பய­ணி­கள் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்றி பய­ணம் செய்வதற்கு வச­தி­யாக அர­சுப் பேருந்­து­க­ளின் இருக்­கை­களில் சமூக இடை­வெ­ளிக்­கான ‘ஸ்டிக்கா்’ ஒட்­டும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

நாளை முதல் பொதுப் போக்கு வரத்­துக்கு அரசு அனு­மதி அளித்­தால் பேருந்­து­களை இயக்­கத் தயார் நிலை­யில் இருக்­கு­மாறும் போக்கு ­வ­ரத்து அதி­கா­ரி­கள் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளனா்.

சென்னை மாநகரப் போக்கு வரத்துப் பிரிவில் 50% பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில் நுட்பப் பணியாளர்கள் பணிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!