சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சென்னை: தமிழ்­நாட்­டில் கொரோனா கிரு­மித்­தொற்று கூடி வரு­கிறது. அந்­தக் கிரு­மி­ ஏற்­படுத்தி வரும் மர­ணங்­களும் அதி­க­ரிக்­கின்­றன. அதே­வே­ளை­யில், தொற்­றி­லி­ருந்து முற்­றி­லும் குண­மடை­வோர் அளவு குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­குக் கூடி வரு­கிறது.

அந்த மாநி­லத்­தில் நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி 21,184 பேரைக் கிருமி தொற்றி இருந்­தது. 160 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­டார்­கள். மொத்­தம் 12,000 பேர் குண­மடைந்து இருக்­கி­றார்­கள். கிருமி தொற்­றி­யோ­ரில் குண­ம­டை­வோர் அளவு 56 விழுக்­கா­டாக அதி­க­ரித்து உள்­ளது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். தமி­ழக மருத்­து­வ­

ம­னை­களில் 9,021 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை 479,155 மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தமிழ்­நாட்­டில் சனிக்­கி­ழமை மட்­டும் ஒரே நாளில் வர­லாறு காணா அள­வுக்கு கொரோனா கிருமி மொத்­தம் 938 பேரைப் பிடித்தது.

அவர்­களில் வெளி மாநி­லங்­களில் இருந்தும் வெளிநாட்­டில் இருந்­தும் வந்­த­வர்­கள் மொத்­தம் 82 பேர். அன்று மட்­டும் ஆறு பேர் மர­ண­ம­டைந்­து­விட்­டார்­கள். சுமார் 700 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். சென்­னை­யில்தான் பாதிப்பு அதி­க­மாக இருக்­கிறது.

சென்­னையை அடுத்து செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளி­லும் தொடர்ந்து தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

இவ்­வே­ளை­யில், செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய சுகா­தார அமைச்­சர் சி. விஜ­ய­பாஸ்­கர், நோயா­ளி­க­ளிடம் அநி­யா­ய­மா­கக் கட்­ட­ணம் வசூ­லிக்­கக்­கூ­டாது என்று தனி­யார் மருத்து­வ­ம­னை­க­ளைக் கடு­மை­யாக எச்­ச­ரித்­தார்.

சென்னை அருகே புளி­யந்­தோப்­பில் புதி­தாக அமைக்­கப்­பட்டு இருக்­கும் 1,400 படுக்­கை­க­ளைக் கொண்ட கொவிட்-19 சிகிச்சை நிலை­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர், தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் சிகிச்­சைக்­காக அதிகக் கட்­ட­ணம் வசூ­லித்­தால் சட்­ட­பூர்­வ­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூறி­னார்.

படுக்கை வச­தி­கள், உள்­கட்­ட­மைப்பு வச­தி­களின் அடிப்­ப­டை­யில் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை அர­சாங்­கம் நிர்­ண­யிக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

காப்­பு­றுதிப் பாது­காப்பு இருப் போருக்கு ஒரு பரி­சோ­த­னைக்கு ரூ. 2,500 வசூ­லிக்­கப்­படும் என்­றார் அவர். இதற்­கி­டையே, மாநி­லம் முழு­வ­தும் கொரோனா பரி­சோ­த­னைக் கூடங்­க­ளின் எண்­ணிக்­கையை 72 ஆக அர­சாங்­கம் அதி­க­ரித்­தது.

மருத்­துவக் கல்­லூ­ரி­கள் ஒரு­புறம் இருக்க, இதர 10 கல்­லூ­ரி­களும் பரி­சோ­தனை மற்­றும் சிகிச்­சைக் கூடங்­க­ளாக மாற்­றப்­பட்டு இருப்­ப­தாக அமைச்­சர் கூறினார்.

வெளி மாநி­லங்­களில் இருந்து குறிப்­பாக மகா­ராஷ்­டி­ரா­வில் இருந்து தமி­ழ­கம் திரும்­பு­வோர் கிரு­மித்­தொற்­று­டன் வரு­கி­றார்­கள்.

இது­வ­ரை­யில் 991 பேர் அடை­யா­ளம் காணப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்று குறிப்­பிட்ட சுகா­தார அமைச்­சர், மக்­க­ளுக்கு அச்­ச­மூட்டும் அள­வுக்கு ஊட­கங்­கள் தவ­றான புள்ளி­வி­வ­ரங்­க­ளைத் தெரி­விக்­கக்­கூ­டாது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!