மதுரை மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

1 mins read
3ee1a32a-9498-42c7-9f14-c4e570e6fd7f
ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இப்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வரும் தன் மகள் நேத்ராவின் படிப்புக்கான பணத்தில் மக்களுக்கு உதவி வரும் மோகன். படம்: தமிழக ஊடகம் -

மதுரை: மதுரை பகு­தி­யில் மோகன், 47, என்ற சிகை அலங்­கார கடைக்­கா­ரர் தன் மக­ளின் படிப்­புக்­காக சேர்த்து வைத்­தி­ருந்த ரூ. 5 லட்­சம் பணத்­தைக் கொண்டு கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள ஏழை மக்­க­ளுக்கு ஏராள உதவிகளைச் செய்து வரு­கி­றார்.

தன் சொத்து, குடும்ப நகை­களை விற்­றும் மக்­க­ளுக்கு உத­வத் தய­ாராக இருப்­ப­தா­க­வும் இவர் தெரி­வித்து உள்­ளார்.

மோக­னின் இந்த அரிய, மனி­தா­பி­மான உதவியை உல­கமே பாராட்டி வரு­கிறது. இந்­நி­லை­யில் நேற்று நாட்டு மக்­க­ளி­டம் வானொ­லி­யில் ஆற்­றிய மன­தின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்­சி­யில் திரு மோக­னைப் பிர­த­மர் மோடி மன­தாரப் பாராட்­டி­னார்.