தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்குகிறது; புயல் அறிகுறி

சென்னை: தமிழ்­நாட்­டிற்கு அதி­க­மாக மழை­யைத் தரக்­கூ­டிய தென்­மேற்­குப் பரு­வ­மழை கேர­ளா­வில் இன்று தொடங்­கு­கிறது. இதன் கார­ண­மாக தென் தமி­ழ­கம், உள் தமி­ழ­கம், மேற்­குத் தொடர்ச்சி மலை மாவட்­டங்­களின் சில இடங்­களில் மித­மான மழை பெய்­யக்­கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி­வித்து இருக்­கிறது.

தென்­கி­ழக்கு அர­பிக்­க­டல் பகுதி­யில் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் உரு­வாகி இருப்­ப­தா­க­வும் இது நாளை புய­லாக வலு­வடைந்து மேற்கு கடற்­க­ரையை ஒட்டி வட­கி­ழக்குத் திசை­யில் நகர்­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் அது தெரி­வித்து உள்­ளது.

இதன் விளை­வாக தென்­கிழக்கு, தென்­மேற்கு அர­பிக்­க­டல் பகு­தி­க­ளி­லும் லட்­சத்­தீவு மற்­றும் கேரள கடற்­க­ரைப் பகு­தி­யி­லும் சூறா­வளி காற்று வீசும் என்­றும் வானிலை மையம் எச்­ச­ரித்துள்ளது.

மீன­வர்­கள் இதைக் கருத்­தில்­கொண்டு கரை­யி­லேயே இருக்க வேண்­டும் என்­றும் அது கேட்­டுக்­கொண்­டது.

தமிழ்­நாட்­டில் திருப்­பூர், கோவை, வேலூர், கிருஷ்­ண­கிரி பகு­தி­களில் சில இடங்­களில் நேற்று மழை பெய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை குறித்த காலத்தில் தொடங்குவதாகவும் அதிக மழை பெய்யும் என்றும் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!