தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது; பேருந்து, ரயில்கள் இயங்கின

சென்னை: தமி­ழ­கத்­தில் சுமார் 68 நாட்­க­ளுக்­குப் பிறகு பேருந்து, ரயில் போக்­கு­வ­ரத்­து­கள் நேற்று முதல் இயங்­கத் தொடங்கி உள்ள தால் மக்­கள் தங்­க­ளின் இயல்பு வாழ்க்­கைக்கு மெல்­லத் திரும்­பத் தொடங்கி உள்­ள­னர்.

சென்னை, செங்­கல்­பட்டு, காஞ்சி­பு­ரம், திரு­வள்­ளூர் ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளைத் தவிர தமி­ழ­கம் எங்­கும் பேருந்து, ரயில் போக்­கு­வரத்து சேவை­கள் இயங்­கத் தொடங்­கின.

அத்­து­டன் அனைத்து பெரிய கடை­க­ளைத் திறக்­க­வும் தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், “இரு மாதத் துக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்­ளதை வர­வேற்கி றோம். இச்சேவைகள் நிறுத்­தப்­படா மல் இன்­னும் கூடு­தல் பாது­காப் புடன் இயக்கப்படவேண்­டும்.

“இப்­போது முன்­பைக் காட்­டி­லும் அதி­க­ள­வில் கிரு­மித்­தொற்று பரவி வரு­கிறது. இருப்­பி­னும் மீண்­டும் பழை­ய­படி பேருந்து போக்­கு­வ­ரத்தை நிறுத்­தி­வி­டா­மல் உரிய பாது­காப்பு டன் தொடர்ந்து இச்­சே­வை­களை வழங்கவேண்­டும்,” என பய­ணி­கள் தமி­ழக அரசை வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

கொரோனா கிரு­மித் தொற்று மேலும் பர­வா­மல் தடுக்­கும் வகை யில் தமி­ழ­கத்­தில் இம்­மா­தம் 30ஆம் தேதி வரை ஊர­டங்கு உத்­த­ரவை முதல்­வர் பழ­னி­சாமி நீட்­டித்து அறி­வித்­துள்­ளார்.

அதன்­படி நான்கு மாவட்­டங்களைத் தவிர்த்து தமி­ழ­கத்­தின் பிற மாவட்­டங்­களில் 50% பேருந்து கள் 60% பய­ணி­க­ளு­டன் இயங்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

காய்ச்­சல், இரு­மல் உள்­ள­வர்களுக்கு பேருந்­தில் அனு­மதி இல்லை என்­றும் பொது இடங்­களில் எச்­சில் துப்­பி­னால் அப­ரா­தத்­து­டன் தண்­டனை விதிக்­கப்­படும் என்­றும் தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்­பில் தமி­ழ­கத்­தில் நான்கு சிறப்பு ரயில்­கள் இயக்­கப்­பட்­டன. இந்த ரயில்­கள் மது­ரை­யில் இருந்து விழுப்­பு­ரத்­திற்­கும் திருச்­சி­யில் இருந்து நாகர்­கோ­வி­லுக்­கும் கோவை­யில் இருந்து மயி­லா­டு­துறை, காட்­பா­டிக்­கும் சேவை வழங்கின.

முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அனு மதிக்கப்படுகின்ற னர். 52 இருக்கைகள் கொண்ட பேருந்து களில் 31 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம். முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே சேலம் மத்திய பேருந்து நிலை யத்திற்கு வருகை புரிந்தனர்.

படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!