‘சென்னையில் இரு வாரத்தில் நல்ல மாற்றம்’

சென்னை: சென்­னை­யில் மக்­கள்­தொகை பெருக்­கம் அதி­க­மாக இருப்­ப­தால்­தான் கொரோனா கிரு­மித் தொற்று வேக­மா­கப் பரவி வரு­கிறது. இன்­னும் இரு வாரங்­களில் இங்கு இந்தக் கிருமி பாதிப்பு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு, நல்ல ஒரு மாற்­றம் தெரிய ஆரம்­பிக்­கும் என்று சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் பிர­காஷ் தெரி­வித்­துள்­ளார்.

“சென்­னை­யில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்படுத்த தீவிர நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வருகின்றன. அதே­வே­ளை­யில், இக் கிருமித்தொற்று அதி­கம் பாதித்­துள்ள பகு­தி­களில் தொடர்ந்து கண்­கா­ணிப்­புப் பணி­கள் தீவிரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன,” என்று பிர­காஷ் மேலும் கூறி­னார்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பிர காஷ் கூறு­கை­யில், “சென்­னை­யில் கட்­டுப்­பாடுகள் விலக்­கப்­பட்ட பெரும்­பா­லான பகுதி­களில் புதிய கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் எது­வும் பதி­வா­க­வில்லை.

“சென்­னை­யில் வீடு­வீ­டா­கச் சென்று ஆய்­வு­கள் நடத்தி வரு­கி­றோம். நோய்த் தொற்றை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து புதுப் புது வியூ­கம் வகுக்­கப்­ப­டு­கிறது. இன்­னும் இரு வாரங்­களில் சென்­னை­யில் பர­வும் கிரு­மித் தொற்று கட்­டுப்­ப­டுத்­தப்­படும்.

“கிருமிப் பர­வ­லைத் தடுக்­கவே மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் தடை நீடிக்­கிறது,” என்றார்.

இந்­நி­லை­யில், சென்னை மாந­க­ராட்சி அலு­வ­ல­கத்­தில் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து முதல்­வர் பழ­னி­சாமி இன்று ஆலோ­ச­னை­யில் ஈடு­பட உள்­ளார்.

சென்­னை­யில் இது­வரை 14,802 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், கொரோனா பர­வ­லைத் தடுப்­பது குறித்து சுகா­தா­ரத்­துறை, மாந­க­ராட்சி அதி­கா­ரி­க­ளு­டன் இந்த ஆலோ சனைக் கூட்­ட­மா­னது நடை­பெற உள்­ளது.

இதற்­கி­டையே, சென்­னை­யில் உள்ள அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வந்த நால்­வர் கிரு­மித் தொற்­றால் நேற்று உயி­ரி­ழந்­த­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

கிருமி பாதிப்பு குறித்து தமி­ழக சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், “தமி­ழ­கத்­தில் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 22,333 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதில் 12,757 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

“தற்­போது 9,400 பேர் சிகிச்­சை பெற்று வருகின்றனர். உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 173ஆக உள்­ளது. சென்­னை­யில் மட்­டும் 129 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

“தமி­ழ­கத்­தில் 12 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் 1,286 பேரும் 13 முதல் 60 வய­துக்கு உட்­பட்டவர்­கள் 18,995 பேரும் 60 வயதை கடந்­த­வர்­கள் 2,052 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

“தமிழ்­நாட்­டில் புதிய உச்­ச­மாக ஞாயி­றன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு இருப்­பது உறுதியானது. “இவர்­களில் சென்­னை­யில் மட்­டும் அதி­க­பட்­ச­மாக 804 பேருக்கு கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்டிருந்த நிலை­யில் மொத்த பாதிப்பு 14,802ஆக உயர்ந்­துள்­ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்,” என்று கூறப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!