மனைவியை உயிருடன் புதைத்து கொடூரம்

மனைவியை உயிருடன் புதைத்து கொடூரம்

1 mins read

நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கோட்ல பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரு சுபாஷினி, 37. இவரது கணவர் புதாபுக்கல சுவாமுலு, 30, கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு குடிபோதை யில் மனைவியுடன் தகராறு செய்தார். பின் ஆத்திரமடைந்த அவர் சுபாஷினியை அடித்து உதைத்ததோடு குச்சியால் தாக்கினார். மயக்கமடைந்த அப்பெண்ணை இரவோடு இர வாக குழி தோண்டிப் புதைத்து உள்ளார். அவர்களின் 7 வயது மகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் சடலத்தை மீட்டு பரிசோத னைக்கு அனுப்பினர். புதைக்கும் போது தமது தாய் உயிருடன் இருந்ததாக மகள் தங்களிடம் கூறியதாக காவல் ஆய்வாளர் பிரதாப் தெரிவித்தார். தப்பி ஓடிய சுவாமுலுவை போலிசார் தேடி வருகின்றனர்.