ராயபுரத்தில் தொடர்ந்து கிருமி பாதிப்பு அதிகரிப்பு

ராயபுரத்தில் தொடர்ந்து கிருமி பாதிப்பு அதிகரிப்பு

1 mins read
185d0597-e51b-4612-bc40-46ad186852cf
சென்­னை­யில் உள்ள 15 மண்­ட­லங்­களில் ராய­பு­ரத்­தில்­தான் அதி­க­மா­னோர் கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். முகக்கவசம் அணியவில்லையெனில் சவாரி இல்லை என்ற பதாகையுடன் செல்கிறது இந்த ஆட்டோரிக்‌ஷா. படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

ராயபுரம்: சென்­னை­யில் உள்ள 15 மண்­ட­லங்­களில் ராய­பு­ரத்­தில்­தான் அதி­க­மா­னோர் கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இங்கு இது­வரை 2,935 பேருக்­கும் கோடம்­பாக்­கத்­தில் 1,867 பேருக்­கும் தண்­டை­யார்­பேட்­டை­யில் 1,839 பேருக்­கும் கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் நேற்­றைய நில­வ­ரப்படி மொத்­தம் 23,495 பேர் இக்­கி­ரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்டிருந்­த­னர். அதில் 13,170 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 10,138 பேர் சிகிச்சை பெற்று வரு கின்­ற­னர். 184 பேர் உயி­ரி­ழந்துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் சென்னை ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­, ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை,­கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தகவல்கள் தெரிவித்துள்ளன.