முதல்வர் வருத்தம்: வழிகாட்டு முறைகளை சென்னை மக்கள் பின்பற்றவில்லை

1 mins read
fd2cc271-c3c3-4231-b737-b945bc288199
தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் அதிகம் கிருமித்தொற்று பரவல் தொடர்வதால் இந்த நடவடிக்கை  எடுக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். படம்: இணையம் -

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றுகையில், "கிருமியைத் தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது. மருத்துவர்கள், தாதியர்களின் சிறப்பான பணியால் 56% பேர் கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அரசின் வழிகாட்டுதல்களைச் சென்னை மக்கள் பின்பற்றவில்லை.

"அப்படி அவர்கள் முறைப்படி பின்பற்றி இருந்தால் இந்நேரம் கிருமியைக் கட்டுப் படுத்தி இருக்கலாம்," என்றார்.