கருணாநிதி பிறந்த நாள்; இலவச திருமணம்

கருணாநிதி பிறந்த நாள்; இலவச திருமணம்

1 mins read
98b85e7b-1b95-40f0-9a63-aa1389f3c75e
-

சென்னை: திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் 97வது பிறந்த நாளை திமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தி கொண்டாடினர்.

சென்னையில் திமுக தலைவரும் அவரது மகனுமாகிய மு.க. ஸ்டா லின் கருணாநிதியின் நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினா ர். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர் பா லு, கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர், கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தொண்டர் அசோக் குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்து புதிய தம்பதிக் கு மு.க. ஸ்டா லின் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். அதே சமயத்தில் கொரோனா கிருமித் தொற்று காரணமாக கருணாநிதியின் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று நேற்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.