10ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு

10ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு

1 mins read
1a2c303d-8d7e-40ea-bd0d-eb6815b3ee51
பத்தாம் வகுப்பு தேர்வுக்குப் பிறகே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் கூறியுள்ளார். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன், 10ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

"தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதே சமயம் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பள்ளிப் பாடங் களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர் நிலைக்குழு ஆய்வு செய்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.