தமிழகம்: 25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; 208 பேர் உயிரிழப்பு

ஒரே நாளில் 11 பேர் பலி; சென்னையில் 17,598 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 25 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

புதன்­கி­ழமை ஒரே நாளில் 1,286 பேருக்கு கிரு­மி ­தொற்­றி­யது உறு­தி­யா­னது. மேலும் அன்­றைய தினம் மட்­டும் 11 பேர் கொவிட்-19 நோய்க்­குப் பலி­யா­கி­னர்.

புதன்­கி­ழ­மை­யன்று 27 மாவட்­டங்­களில் புதி­தாக நோய்த்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது. அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 1,012 பேரும், செங்­கல்­பட்­டில் 61 பேரும், திரு­வள்­ளூ­ரில் 58 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

திரு­வா­ரூ­ரில் 2 பேருக்­கும், தர்­ம­புரி, கன்­னி­யா­கு­மரி, கரூர், நாகப்­பட்­டி­னம், ராம­நா­த­பு­ரம், தேனி, விழுப்­பு­ரம், விரு­து­ந­க­ரில் தலா ஒரு­வ­ருக்­கும் கிரு­மி ­தொற்­றி­யது உறு­தி­யா­னது.

தமி­ழ­கத்­தில் மொத்த பலி எண்­ணிக்கை 208ஆக அதி­க­ரித்­துள்ள நிலை­யில், இது­வரை 14,316 பேர் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர். வியா­ழக்­கி­ழமை காலை நில­வ­ரப்­படி 11,345 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மாநி­லம் முழு­வ­தும் இது­வரை 12 வய­துக்கு உட்­பட்ட 59 குழந்­தை­கள், 60 வய­துக்கு மேற்­பட்ட 185 முதி­ய­வர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

“தமி­ழ­கத்­தில் புதன்­கி­ழமை ஒரே நாளில் 14,101 தொண்டை சளி மற்­றும் ரத்த மாதி­ரி­கள் பரி­சோதனை செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் இது­வரை 5,28,534 மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை காலை நில­வ­ரப்­படி தமி­ழ­கத்­தில் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 17,598 பேருக்கு கொவிட்-19 நோய் தாக்­கி­யுள்­ளது. இவர்­களில் 9,034 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 158 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

சென்­னை­யில் உள்ள 15 மண்­ட­லங்­களில் அதி­க­பட்­ச­மாக ராய­பு­ரத்­தில் 3,224 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கோடம்­பாக்­கத்­தில் 2,029 பேருக்­கும், திரு.வி.க.நக­ரில் 1,798 பேருக்­கும், அண்­ணா­ந­க­ரில் 1,525 பேருக்­கும் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது என்­றும் சுகா­தார அமைச்­சின் செய்­திக்­ குறிப்பு தெரி­விக்­கிறது.

கடந்த திங்­கள், செவ்­வாய், புதன் ஆகிய மூன்று தினங்­களில் மட்­டும் தமி­ழ­கத்­தில் 3,539 பேர் கொரோனா கிரு­மி­யின் பிடி­யில் சிக்கி உள்­ள­னர். இதை­ய­டுத்து அங்கு மேலும் சில நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களை விதிக்க வேண்­டும் என ஒரு தரப்­பி­னர் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.