'மக்கள் நெருக்கடியே தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணம்'

'மக்கள் நெருக்கடியே தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணம்'

1 mins read
d156dcd0-5eff-4161-b7b3-2c51f3e443d0
தமிழ் நாடு மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார். -

சென்னை: பேரூ­ராட்சி, நக­ராட்சி, மாந­க­ராட்சி உள்­ளிட்ட பகு­தி­களுக்கு ஏற்­ற­வாறு மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் ஊர­டங்­கில் தளர்வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

தளர்­வு­கள் இல்லை என்­றால் மக்­கள் பெரும் இன்­னல்­க­ளுக்கு ஆளாக நேரி­டும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்பட்ட பகு­தி­களில் மக்­கள் தொகை ஒரு கோடிக்­கும் அதி­கம் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், இத்­த­கைய பகு­தி­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்டுப்­ப­டுத்­து­வது சிர­மம் என்­றார்.

எனி­னும் நோய்த்­தொற்று பர­வா­மல் இருக்க தமி­ழக அரசு தீவிர நட­வ­டிக்­கையை எடுத்து வரு­வ­தா­க­வும் பொது­மக்­கள் அரசு­டன் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கேட்­டுக்­கொண்­டார். மேலும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டார்.

144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடைக் காலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்கள் ஆயிரம் பேருக்கு அவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.