ஊருக்குள் உலா வந்த காட்டெருமைகள்

ஊருக்குள் உலா வந்த காட்டெருமைகள்

1 mins read
43681c18-0da8-4475-bafe-978d1d89bd80
ஊருக்குள் புகுந்த காட்டு எருமைகளை பொதுமக்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கைபேசிகளில் படம் பிடித்தனர். பின்னர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பலருடன் பகிர்ந்தனர். படம்: ஊடகம் -

திண்­டுக்­கல்: காட்டு எரு­மை­கள் திடீ­ரென நக­ருக்­குள் நுழைந்­த­தால் கொடைக்­கா­னல் பகுதி பொது­மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ள­னர்.

ஊர­டங்கு கார­ண­மாக கொடைக்­கா­னல் பகு­தி­யில் வாக­னப் போக்­கு­வ­ரத்து வெகு­வா­கக் குறைந்­துள்­ளது. இத­னால் வழக்­க­மான இரைச்­சல் குறைந்­துள்­ளதை அடுத்து, வனப்­ப­கு­தியை விட்டு வெளியே வரும் விலங்­கு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இவை அவ்­வப்­போது நகர்ப்­ ப­குதிக்­குள் ஊடு­ரு­வு­கின்­றன.

அந்த வகை­யில் அண்­மைய சில நாட்களாக கொடைக்­கா­னல் பகு­தி­யில் ஏரா­ள­மான காட்­டு எருமை­க­ளைக் காண முடி­கிறது. அவை குட்­டி­க­ளு­டன் வலம் வரு­கின்­றன.

நேற்று காலை கொடைக்­கா­னல் நகர்ப்­ப­கு­தி­யில் உள்ள அண்­ணா­சா­லை­யில் பத்­துக்­கும் மேற்­பட்ட காட்­டெ­ரு­மை­கள் கூட்டமாக உலா வந்­தன. அவற்­றின் குட்­டி­கள் அங்­கு­மிங்­கு­மாக ஓடித்­தி­ரிந்­தன. இதைக் கண்ட அப்­ப­குதி மக்­கள் பீதி­யில் ஓட்­டம்­பி­டித்­த­னர்.

இது­கு­றித்து தக­வல் அறிந்த வனத்­து­றை­யி­னர் விரைந்து வந்து காட்­டெ­ரு­மை­களை இரண்டு மணி நேரம் போராடி மீண்­டும் காட்டுப்­பகுதிக்­குள் விரட்­டி­ய­டித்­த­னர்.

காட்­டெ­ரு­மை­க­ளின் திடீர் வரு­கை­யால் சில மணி நேரங்­களுக்­குப் பர­ப­ரப்பு நில­வி­யது.