புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வசதி செய்துகொடுக்க உத்தரவு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வசதி செய்துகொடுக்க உத்தரவு

1 mins read
3920116b-4357-4d5e-b312-c6f8d086763d
-

சென்னை: புலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­க­ளின் உழைப்பை உறிஞ்­சி­விட்டு, அவர்­க­ளுக்கு நன்­றி­யற்­ற­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது என சென்னை உயர் ­நீ­தி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

எனவே தொழி­லா­ளர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து வச­தி­களை­யும் போர்க்­கால அடிப்­ப­டை­யில் செய்து கொடுக்க வேண்­டும் என்று தமி­ழக அர­சுக்கு உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

வழக்கு ஒன்றை விசா­ரித்த நீதி­ப­தி­கள், புலம்­பெ­யர்ந்த தொழிலாளர்கள் அனை­வ­ருக்­கும் உணவு, தங்­கும் இடம், மருத்­துவம் உள்­ளிட்ட வச­தி­களை செய்து கொடுப்­பது மாநில அர­சின் கடமை என்று குறிப்­பிட்­ட­னர்.

எனவே, அடிப்­படை வச­தி­கள் இல்­லா­மல் தவிக்­கும் புலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, அவர்­க­ளுக்கு போர்க்­கால அடிப்­ப­டை­யில் அனைத்து வச­தி­க­ளை­யும் தமி­ழக அரசு செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்து கொடுத்த வசதிகள் குறித்து அறிக்கை தாக்­கல் செய்ய வேண்டும் என்­றும் நீதி­ப­தி­கள் உத்த­ர­விட்­டுள்­ள­னர்.

முன்னதாக வாதிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக கூறினார்.

மத்திய அரசின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராஜகோபாலன், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.