ஐ.நா. நல்லெண்ணத் தூதராக மதுரை மாணவி நேத்ரா தேர்வு

மதுரை: கோயில்­க­ளின் நக­ர­மான மது­ரை­யில் முடி­தி­ருத்­தும் கடையை நடத்தி வரும் சி. மோகன் என்­ப­வ­ரின் 13 வயது மகள் எம்.நேத்ரா ஏழை­க­ளுக்­கான நல்­லெண்­ணத் தூத­ராகத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்.

“எங்­க­ளுக்கு இந்­தச் செய்­தியை கேட்­கவே மிக­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் பெரு­மை­யா­க­வும் உள்­ளது,” என்று ஐஏ­என்­எஸ் ஊட­கத்­துக்கு அளித்­துள்ள பேட்­டி­யில் மோகன் கூறி­யுள்­ளார்.

மதுரை மேல­மடை பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மோகன். முடிதிருத்­தும் கடையின் உரிமை யாளரான இவர், ஊர­டங்­கால் பாதிக்­கப்­பட்ட 615 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்­க­றி­கள், மளிகைப் பொருட்­கள் போன்­ற­வற்றை வழங்கினார்.

இதற்­காக நேத்­ரா­வின் படிப்­புக்­காகச் சேமித்து வைத்­தி­ருந்த ரூ.5 லட்­சம் பணத்தையும் செல­விட்டார் மோகன்.

ஒன்­ப­தா­வது வகுப்பில் படித்து வரு­ம் நேத்ரா, ஐஏஎஸ் ஆக வேண்­டும் என்ற கன­வு­டன் படித்து வரு­வ­தாகவும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதற்­கி­டையே, மக்­க­ளுக்கு மோகன் மக்களுக்கு உத­விக்கரம் நீட்டிய சம்­ப­வம் பிர­த­மர் மோடிக்கு தெரி­ய­வந்­ததை அடுத்து, அவர் ‘மன­தின் குரல்’ நிகழ்ச்­சி­யில் இது­கு­றித்து சுட்­டிக்­காட்­டிப் பேசி­னார்.மோக­னுக்கு பாராட்­டும் தெரி­வித்­தார். இதை­ய­டுத்து மோகன் தன் குடும்­பத்­தி­ன­ரு­டன் பாஜ­க­வில் இைணந்­தார்.

இந்­நி­லை­யில், நேத்­ராவை ஏழை மக்­க­ளின் நல்­லெண்­ணத் தூத­ராக வளர்ச்சி, அமை­திக்­கான ஐநா சபை அறிவித்­துள்­ளது. மேலும் அவ­ரு­டைய எதிர்­கா­லத்­திற்­காக ஒரு லட்ச ரூபாயை ஊக்­கத் தொகை­யா­க­வும் வழங்கி உள்­ளது.

ஜெனி­வா­வில் நடை­பெ­றும் ஐநா மாநாட்­டில் வறுமை தொடர்­பாக பேச­வும் மாணவி நேத்­ரா­விற்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!