கிருமியைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் குழு அமைப்பு

சென்னை: சென்னையில் கொரோனா கிருமி பரவாமல் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே 1,000க்கும் மேலானோருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சென்னையில் மொத்தம் 18,693 பேர் இக் கிருமியால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் கிருமியைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.