ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜெ.அன்­ப­ழ­கன் (படம்) கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக முன்பு கூறப்­பட்ட நிலை­யில், இப்ேபாது அவ­ரது உடல்­நி­லை­யில் ஓரளவு முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக ரேலா மருத்­து­வ­மனைத் தக­வல்­கள் தெரிவித்துள்ளன.

திமு­க­வின் சென்னை மேற்கு மண்­ட­லச் செய­லா­ள­ரும் திரு­வல்­லிக்­கே­ணித் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அன்­ப­ழ­கனுக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா கிரு­மித்தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்­பட்டு தீவிர சிகிச்சை வழங்­கி வருகின்றனர்.

இந்­நி­லை­யில், ரேலா மருத்­துவ மனை­யின் தலைமைச் செயல் அதி­காரி டாக்­டர் இளங்­கு­ம­ரன் கலி­ய­மூர்த்தி நேற்று வெளி­யிட்­டி­ருந்த அறிக்­கை­யில், “கடந்த 24 மணி நேர­மாக அவ­ரது உடல்­நிலை­யில் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை,” என்று குறிப்பிட்டி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, “80% ஆக்­சி­ஜன் செலுத்­தப்­பட்டு வந்த நிலை­யில், தற்­போது 60% மட்­டும் செலுத்­தப்­பட்­டால் போது­மா­னது என்­கிற அள­வுக்கு முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது,” என்று அன்­ப­ழ­க­னின் சகோ­தா­ரர் கரு­ணா­நிதி கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்­து­வ­ரி­டம் விவ­ரம் கேட்­ட­றிந்த முதல்­வர் பழனிசாமி, விரை­வில் அவர் பூர­ண ­ந­லம்பெற இறை­வனை வேண்­டிக்­கொள்­வ­தாக டுவிட்­டர் பதிவில்­ தெரிவித்துள்ளார்.

அன்­ப­ழ­கன் சிகிச்சை பெற்று வரும் மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்ற சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், அங்கு அவ­ருக்கு அளித்­து­வ­ரும் சிகிச்சை குறித்து மருத்­து­வர்­க­ளி­டம் கேட்­ட­றிந்­தார்.