சென்னை: ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தாய் இலங்கையிலும் தங்கை லண்டனிலும் வசித்து வருகின்றனர். அவர்களிடம் முருகனும் நளினியும் பேசுவதற்கு அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "அவர்களை விரைவில் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தொலைபேசியில் பேச தடை விதிப்பது நியாயமா?" என கேள்வி எழுப்பினார். மனிதாபிமான அடிப்படையில் ஏன் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய நீதிபதி, கிருபாகரன், விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீதிபதி: நளினி, முருகன் தொலைபேசியில் பேச அனுமதி மறுப்பது ஏன்?
1 mins read
-

