ஆயிரமாண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு

ராஜ­பா­ளை­யம்: ராஜ­பா­ளை­யத்­தின் முறங்கு அரு­கே­யுள்ள மாங்­கு­டி­யைச் சேர்ந்த பெரு­மாள்­பட்டி என்­னும் ஊரில் ஆயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­வாய்ந்த 5 அடி உய­ர­முள்ள கொற்­றவை சிலை ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

விவ­சாயி கருப்­பையா, தனது நிலத்­தில் உழு­து­கொண்­டி­ருக்­கும் போது இந்­தச் சிலை தட்­டுப்­பட்­டது.

இந்­தச் சிலை நான்கு கைகளும் உடைந்த நிலை­யில் காணப்­பட்­டது. சிலை நிறுத்­தப்­பட்­டுள்ள ஆச­னக்­கல் மற்­றும் கொற்­ற­வை­யின் வாக­ன­மான கலை­மான் சுருங்­கிய கொம்­பு­க­ளு­டன் மிக நேர்த்­தி­யா­கச் செதுக்­கப்­பட்­டுள்­ளது.

கொற்­றவை சிலை­யின் உருவ அமைப்­பைக் கொண்டு பார்க்­கும்­போது முற்­கால பாண்­டி­யர் காலத்தைச் சேர்ந்த அரிய வகை சிலை­யாக கரு­தப்­ப­டு­கிறது.

ஆவு­டை­யா­பு­ரம் பகு­தி­யில் ஏற்­கெனவே 12ஆம் நூற்­றாண்டைச் சேர்ந்த நந்தி சிலை, தமிழ் கல்­வெட்டு, விநா­ய­கர் சிலை மற்­றும் பல கல்­தூண்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன என்று கூறியுள்ளார் ராஜ­பா­ளை­யம் ராஜூக்­கள் கல்­லூரி வர­லாற்றுத் துறை உதவி பேரா­சி­ரி­ய­ரும் தொல்­லி­யல் ஆய்­வா­ள­ரு­மான கந்­த­சாமி. அவ்வகை­யில் பழ­மை­யான கொற்­றவை சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தால், இப்­ப­கு­தி­யில் ஆயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான ஒரு கோவில் அழிந்­தி­ருக்­க­லாம் என்­பதை கள ஆய்­வின் மூல­மாக இப்­பகுதி வர­லாற்றை உறு­திப்­ப­டுத்த முடி­யும் என்­றார்.

வட­இந்­தி­யா­வில் கொற்­ற­வைக்கு சிங்­கம் மற்­றும் புலி போன்­றவை வாக­ன­மாக காட்­டப்­பட்­டுள்­ளது. ஆனால் தமி­ழ­கத்­தில் கலை­மான் கொற்­ற­வை­யின் வாக­ன­மா­கக் காட்­டப்­ப­டு­வது அரி­தாக உள்­ளது.

வடதமி­ழ­கத்­தில் எடுக்­கப்­பட்ட மான் வாக­னத்­தைக் கொண்ட கொற்­றவை சிலை ஒன்று சென்னை அரசு அருங்­காட்­சி­ய­கத்­தில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தென்தமி­ழ­கத்­தில் கொற்­ற­வை­யின் வாக­ன­மாக கலை­மா­னு­டன் உள்ள சிலை இப்­போ­து­தான் முதன்­மு­த­லாக கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

சங்க இலக்­கி­யம், சிலப்­ப­தி­காரத்­தில் கொற்­றவை பற்­றிய குறிப்­பு­கள் காணப்­ப­டு­கின்­றன. பாலை நில மக்­க­ளின் முக்­கிய கட­வு­ளா­க­வும் போர் வீரர்­கள் வணங்­கும் தெய்­வ­மா­க­வும்கூட கொற்­றவை வழி­பாடு இருந்­துள்­ளது. தற்­போது கொற்­றவை வழி­பாடு பிடாரி, காளி, துர்க்கை போன்ற கட­வு­ளர் வழி­பாட்­டோடு சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!