திருநள்ளாறு: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு, பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தமிழகத்தில் நாளை 8ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து ஆலயத்திற்குள் பக்தர்கள் வரிசையாகச் செல்ல தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. கைகளைச் சுத்தம் செய்வதற்கு தானியங்கி கிருமிநாசினி இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆலயங்கள் எல்லாம் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசால் ஏன் ஆல யங்களைத் திறப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்க முடியவில்லை என்று பொது மக்கள் பலரும் முன்னதாக குற்றம்சாட்டி வந்தனர்.

