முதல்வர்: மாணவி நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்

முதல்வர்: மாணவி நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்

2 mins read
1534f0f6-4bfb-4c4b-8d2f-fcb93be35fba
தன்­ன­ல­மின்றி பொது நலத்தை பெரி­தாக எண்ணி ஏழை எளிய மக்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டிய மாணவி நேத்­ரா­வின்‌ உயர்‌ கல்­விச் செலவை தமி­ழக அரசே ஏற்­கும்‌ என்று முதல்­வர் பழ­னி­சாமி கூறி­யுள்­ளார். கோப்புப்படம் -

மதுரை: தன்­ன­ல­மின்றி பொது நலத்தை பெரி­தாக எண்ணி ஏழை எளிய மக்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டிய மாணவி நேத்­ரா­வின்‌ உயர்‌ கல்­விச் செலவை தமி­ழக அரசே ஏற்­கும்‌ என்று முதல்­வர் பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

இது­கு­றித்து அவர் வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில், "முடி­தி­ருத்­தும் தொழி­லில் காட்­டிய கடின உழைப்­பின் மூலம், தனது மக­ளின் எதிர்­கா­லப் படிப்­புச் செல­வுக்­காக நேத்­ரா­வின் தந்தை மோகன் ரூ.5 லட்­சத்தைச் சேமித்­துள்­ளார்.

"இந்­தப் பணத்தை ஊர­டங்கால் சிரமப்படும் ஏழை, எளிய மக்­க­ளுக்கு செல­வி­டும்­படி தனது தந்­தை­யி­டம் கூறி­யுள்­ளார் நேத்ரா.

"பணத்தை பின்­னா­ளில் சேமிக்­க­மு­டி­யும். ஆனால், வரு­மா­ன­மின்றி சிர­மப்­படும் ஏழை மக்க ளுக்கு உட­ன­டி­யாக உதவி செய் வதை தள்­ளிப்­போ­டக் கூடாது என்ற நேத்­ரா­வின் நல்­லெண்­ணத்தை அங்­கீ­க­ரிக்­கும்‌ வகை­யில்‌ அவ­ரது கல்­விச் செலவை அரசு ஏற்­கிறது.

"செல்வி நேத்ரா இது­போன்ற பற்­பல பாராட்­டு­தல்­க­ளை­யும்‌ அங்கீ காரத்­தை­யும்‌ பெற்று தமிழ்­நாட்­டிற்­கும்‌ இந்­தி­யா­விற்­கும்‌ மேலும்‌ பெருமை சேர்த்­திட வேண்­டும்‌ என மன­தார வாழ்த்­து­கிறேன்," என்று முதல்வர் பாராட்­டி­யுள்­ளார்.

பிர­த­மர் மோடி­யி­ட­மி­ருந்து பாராட்டு, ஐநா சபை­யின் 'ஏழை மக்­க­ளின் நல்­லெண்­ணத் தூதர்' நிய­ம­னம் ஆகி­ய­வற்­றைத் தொடர்ந்து தற்­போது மாண­வி­யின் உயர் கல்­விச்­செ­ல­வை­யும் அரசே ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தால் நேத்­ரா­வின் நல்­லெண்­ணத்­துக்கு நல்ல அதிர்ஷ்­டம் அடித்­தி­ருப்­ப­தாக வலைத்­த­ள­வா­சி­கள் சமூக வலைத்தளங்­களில் கருத்­து­க­ளைப் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

மதுரை மேல­மடை பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மோகன். முடி­தி­ருத்­தும் கடை­யின் உரி­மை­யா­ள­ரான இவர், ஊர­டங்­கால் பாதிக்­கப்­பட்ட 615 குடும்­பங்­க­ளுக்கு 5 கிலோ அரிசி, காய்­க­றி­கள், மளி­கைப் பொருட்­கள் போன்­ற­வற்றை தனது மக­ளின் ஆசைப்­படி வழங்­கி­னார்.

ஐஏ­எஸ் ஆக­வேண்­டும் என்ற கன­வு­டன் எட்­டாம் வகுப்­பில் நேத்­ரா படித்து வருகிறார்.

நாங்கள் ஒரு சிறிய குடும்பத்தைச் சேர்ந்த எளிமையான மனிதர்கள். இதுபோன்ற அடுத்தடுத்த கௌர வத்தை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மகள் நேத்ராவை வந்தடையும் கௌரவம் குறித்து

தந்தை ேமாகன்.