வீடு கட்டுமானச் செலவு அதிகரிப்பு

வீடு கட்டுமானச் செலவு அதிகரிப்பு

1 mins read

சென்னை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான செலவுத் தொகை சதுர அடிக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறுகையில், "சிமெண்ட் விலை உயர்வு, மணல் தட்டுப்பாடு, பணி யாளர்கள் பற்றாக்குறை, கொரோனா தடுப்புக்கான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றால் கட்டுமான செலவு சதுர அடிக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது," என்றார் அவர்.