சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிருமித்தொற்று

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிருமித்தொற்று

2 mins read
db926237-d417-4a05-8660-2b0257802cf8
-

சென்னை: சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் பணி­யாற்­றும் நீதி­ப­தி­கள் மூவ­ருக்கு 'கொவிட்-19' கிரு­மித் தொற்று பரவி இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­மூன்று நீதி­ப­தி­க­ளு­டன் நீதி­மன்­றத்­தின் பதி­வுத்­துறை அதி­கா­ரிக்­கும் இதர ஊழி­யர்­கள் சில­ருக்­கும் இத்­தொற்று பர­வி­யுள்­ள­தாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தக­வல் களை அடுத்து, வழக்­கு­களை விசா­ரணை செய்­யும் முறை­யில் மாற்­றம் செய்­யப்பட்டுள்ளது.

இதன்­படி, அவ­சர வழக்­கு­களை மட்­டும் வீட்­டில் இருந்­த­வாறே காணொ­ளிக் காட்சி வழி­யாக விசா­ரிப்­ப­தற்கு முடி­வெ­டுக்கப்பட்டுள்ளது.

அண்­மைய நாட்­க­ளாக வழக்கு விசா­ர­ணை­களை நீதி­மன்­றத்­திலேயே நேர­டி­யாக நடத்­தும்­படி பார் கவுன்­சி­லும் வழக்­க­றி­ஞர் சங்­கங்­களும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன.

இருப்­பி­னும், தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் காணொ­ளிக் காட்சி வழி­யாக மட்­டுமே விசா­ரணை நடத்­து­வ­தற்கு சாத்­தி­யப்­படும் என தெரி விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்விவ­கா­ரம் குறித்து தலைமை நீதி­பதி ஏ.பி.சாஹி தலை­மை­யில் மூத்த நீதி­ப­தி­கள் அடங்­கிய நிர்­வா­கக் குழு கூடி விவா­தித்­தது.

இதைத்­தொ­டர்ந்து உயர் நீதி­மன்ற பதி­வா­ளர் ஜென­ரல் சி.கும­ரப்­பன் வெளி­யிட்ட அறி­விப்­பில், "மற்ற பகு­தி­களை விட­வும் சென்­னை­யில் கிரு­மித்­தொற்­றின் அச்­சு­றுத்­தல் அதி­கமாக உள்­ளது.

"அத்­து­டன், நீதி­மன்­றம் வந்து செல்­வ­தற்­கான உகந்த சூழ­லும் இல்­லா­த­தால் உயர் நீதி­மன்­றம் இயங்­கு­வ­தற்கு வேறு அணுகு முறை­யைப் பின்­பற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

"உயர் நீதி­மன்ற அதி­கா­ரி­கள், ஊழி­யர்­க­ளின் போக்­கு­வ­ரத்­துக்­கும் பிரச்­சி­னை­கள் தொடர்­கின்­றன.

"இது நீதி­ப­தி­க­ளின் பணி­யி­லும் பாது­காப்பு ஊழி­யர்­க­ளின் பணி யிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

"எனவே, தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அவ­சர வழக்­கு­களை மட்­டுமே காணொ­ளிக் காட்சி வழி­யாக விசா­ரணை நடத்­து­வ­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்டு உள்­ளது.

"இந்த நடை­முறை புதிய முடிவு எடுக்­கும் வரை அல்­லது இம்­மா­தம் முழு­வ­தும் அம­லில் இருக்­கும்," என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடப்­பில் இருந்து வரும் ஊர­டங்கு உத்­த­ர­வைத் தொடர்ந்து ஏப்­ரல் மாதத்­தில் அவ­சர வழக்­கு­களை மட்­டும் காணொ­ளிக் காட்சி வழி­ விசா­ரிக்க ஒன்­பது நீதி­ப­தி­கள் நிய­மிக்­கப்­பட்­ட­னர்.

இதை­த்தொடர்ந்து ஜூன் 1 முதல் அனைத்து நீதி­ப­தி­களும் உயர் நீதி­மன்­றம் வந்து வழக்­கு­களை விசா­ரிப்­பது என­வும் வழக்­க­றி­ஞர்­கள் யாரை­யும் அனு­ம­திக்­கப் போவ­தில்லை என்­றும் கூறினர்.

அதன்­படி கடந்த வாரம் உயர் நீதி­மன்­றத்­துக்கு வந்த அனைத்து நீதி­ப­தி­களும் தங்­கள் அறை­களில் அமர்ந்து காணொ­ளிக் காட்சி வழி­யாக விசா­ரணை நடத்­தி­னர்.

உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளு­டன் கட்­டுப்­பா­டு­களை கடைப்­பி­டித்­த­படி விசா­ரணை நடந்தது. இருப்­பி­னும் ஒரு­வா­ரம் கூட இந்த நடை­மு­றை­யைத் தொட­ர­முடி­யா­மல் நீதி­ப­தி­கள் உள்ளிட்ட பலருக்கும் கிரு­மித்­தொற்று பரவி உள்ளதால் மீண்டும் பழையபடி வீட்டில் இருந்தபடியே விசாரணைகள் நடத்த முடிவெடுத்துள்ளனர்.