நடிகர் சிவகுமார் மீது போலிசில் புகார்

நடிகர் சிவகுமார் மீது போலிசில் புகார்

1 mins read
15b92836-5c83-4af0-b035-2ae3886132ad
நடிகர் சிவக்குமார். கோப்புப்படம் -

திரு­மலை: திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் குறித்து அவ­தூ­றான கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­தாக நடி­கர் சிவ­கு­மார் மீது வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

சிவ­கு­மா­ரின் பேச்சு உல­கெங்­கும் உள்ள பல கோடி ஏழு­ம­லை­யான் பக்­தர்­க­ளுக்­கும் ஆலயத்தின் பெரு­மைக்­கும் களங்­கம் விளைவிக்­கும் வகை­யில் இருப்பதாக ஆலய நிர்வாகம் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளது.

'இலக்­கி­யம் ஆரோக்­கி­யம் இல்­ல­றம்' என்ற தலைப்­பில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது, சிவ­கு­மார் சில கருத்­து­களை முன்­வைத்­தார்.

கட­வுள் இருக்­கி­றார் என்­பது உண்­மை­யா­னால் சுனாமி ஏன் வந்­தது என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். மேலும் கோவில்­களில் இந்­நாள் வரை தீண்­டா­மை­யும் ஏழை, பணக்­கா­ரன் என்ற பாகு­பா­டும் நில­வு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மேலும் பணக்­கா­ரர்­கள் இர­வெல்­லாம் மது­போ­தை­யில் இருந்­து­விட்டு காலை­யில் குளிக்­கா­ம­லேயே கோவி­லுக்­குச் சென்­றா­லும்­கூட பூர­ண­கும்ப மரி­யாதை அளிக்­கப்படு­வதாக சிவ­கு­மார் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தார்.

இதை­ய­டுத்து அவர் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது.