சென்னை ராயபுரத்தில் பாதிப்பு அதிகம்

சென்னை ராயபுரத்தில் பாதிப்பு அதிகம்

1 mins read
45dbc743-ae6b-4b89-8abd-2bd6dec9097b
தமிழகத்தின் பல பகுதிகளில் கொவிட்-19 முடக்கம் ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. பல ஊர்களில் உணவகங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவை பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்கத் தொடங்கியுள்ளன. படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

ராயபுரம்: தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 33,229 ஆகவும் பலியானோரின் எண்ணிக்கை 286 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டுமே தினமும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருவதால் சென்னையின் மொத்த பாதிப்பு 23,298 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,023 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டையார் பேட்டையில் 3,019 பேருக்கும் தேனாம்பேட்டையில் 2,646 பேருக்கும் கோடம்பாக்கத்தில் 2,539 பேருக்கும் திரு.வி.க. நகரில் 2,273 பேருக்கும் அண்ணா நகரில் 2,068 பேருக்கும் அடையாறில் 1,325 பேருக்கும் வளசரவாக்கத்தில் 1,088 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.