சென்னை: தமிழகத்தில் 'கொவிட் 19' கிருமித்தொற்றின் தாக்கம் சென்னை மாவட்டத்தில்தான் நாளும் அதிகரித்து வருகிறது.
மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவரும் இப்பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் குறைந்தது ஒருவார காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிகாரிகள் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதால் விரைவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இத்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதர மாவட்டங்களில் இப்பரவல் ஒரு கட்டுக்குள் உள்ளது.
சென்னை மாவட்டத்தில் தினமும் 1,000த்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு என்பது வெறும் பெயரளவுக்கே உள்ளது. அரசின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வரு கிறது. கடைகளுக்குச் செல்வோரில் பெரும் பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்ப தில்லை. இந்த காரணங்களால் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னையில் பாதிப்பு இருப்பவரை மட்டுமே பரிசோதனைக்கு அழைத்துச் செல் கின்றனர். குடும்பத்தினரையும் அவரைச் சுற்றி உள்ளோரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை.
அவர்கள் தங்களது விருப்பம் போல் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் வீட்டில், 'நோட்டீஸ்' ஒட்டப்படுகிறது; வேறு தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. மக்களும் ஒத்துழைக்காததால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

