திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் ஒடிசாவைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 162 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வேலையின்றி, சம்பளமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், பிள்ளை குட்டிகளுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி, பசி பட்டினியுடன் வசித்து வரும் இந்த தொழிலாளர்கள் அனைவரும் திடீரென தங்களது பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு, தங்களது சொந்த மாநிலங்களுக்கே தங்களை அனுப்பிவைக்கும்படி போராட்டம் நடத்தினர். அத்துடன் அவர்கள் நள்ளிரவு நேரத்தில் தங்களது மாநிலத்துக்கு நடந்தே செல்லவும் முயன்றனர். இதையடுத்து, பொதுமுடக்கம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து இல்லாததால் உரிய அனுமதி பெற்ற பின்னரே சொந்த மாநிலத்திற்கு திரும்பமுடியும் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அமைதி காத்து வருகின்றனர். படம்: ஊடகம்
தங்கள் மாநிலத்திற்கு அனுப்புமாறு போர்க்கொடி
1 mins read
-

