சுகாதாரத் துறை: கிருமித்தொற்றால் தமிழகத்தில் 307 பேர் பலி 90% மக்கள் நாள்பட்ட நோயால் உயிரிழப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தால் பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை 307ஆக அதி­க­ரித்­துள்­ளது. அவா்களில் சென்­னை­யில் மட்­டுமே 244 போ் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தமி­ழக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்து உள்­ளது.

இந்த 307 பேரில் 90%க்கும் மேற்­பட்ட மக்­க­ளுக்கு நீரி­ழிவு நோய், ரத்த அழுத்­தம், இத­யப் பிரச்­சினை உள்­ளிட்ட நாள்பட்ட நோய்­கள் இருந்­த­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

தமி­ழ­கத்­தில் இது­வரை இல்­லாத வகை­யில் செவ்­வாய்க்­கி­ழமை ஒரே நாளில் 1,685 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர்.அதில், ஆக அதி­க­மாக சென்னை மாவட்­டத்­தில் 1,242 போ் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனா். இதன்­மூ­லம் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 34,914ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இது­கு­றித்து சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், “தமி­ழ­கத்­தில் இது­வரை மொத்­தம் 5.93 லட்­சம் பேருக்கு கொரோனா பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப் பட்­டுள்­ளன. அதில், 34,914 பேருக்கு இத்­தொற்று இருப்­பது உறுதி ஆகி­யுள்­ளது. அவா்கள் அனை­வ­ரும் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப் பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனா்.

“கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 798 போ் பூரண குணம் அடைந்து செவ்­வாய்க்­கி­ழமை வீடு திரும்­பினா். இதன்­மூ­லம் இது­வரை மாநி­லத்­தில் குண­ம­டைந்­த­வா்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 18,325ஆக அதி­க­ரித்­துள்­ளது. சென்­னை­யில் தான் ஆக அதிகமாக 11,730 போ் குணம் அ­டைந்­துள்­ளனா்,” என்று தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!