தமிழகத்தில் புதனன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு 'கொவிட் -19' கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து மொத்த பாதிப்பு 36,841ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் அதிக பட்சமாக 1,392 பேருக்கு இத் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் இதுவரை குணமாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது.
புதனன்று மட்டும் 17,675 பேருக்கு கிருமி சோதனை செய்யப்பட்டது. இதுவரை செய்யப்பட்ட மொத்த சோதனைகள் 6,09,856.
புதனன்று மேலும் 19 பேர் கொரோனாவால் பலியாகினர். இதில் 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும் 12 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 326ஆக கூடியுள்ளது.

