தமிழில் உள்ளதுபோலவே ஊரின் பெயரை எழுத, உச்சரிக்க உத்தரவு

1 mins read
30ac4409-67c5-45fb-ba34-35514b853e13
எழும்பூரை ஆங்கிலத்தில் 'எக்மோர்' எனக் குறிப்பிட்டு வந்த நிலையில், இனி எழும்பூர் என்றே பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள ஊர்­க­ளின் பெயர்­கள் தமி­ழில் எவ்­வாறு உச்­ச­ரிக்­கப்­படு கிறதோ அதே­போல் ஆங்­கி­லத்­தில் உச்­ச­ரிக்­க­வும் எழு­த­வும் வேண்­டும் என்­ப­தற்­கான அர­சா­ணையை தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இதை தமிழ் ஆர்­வ­லர்­கள் பல­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

உதா­ர­ண­மாக, எழும்­பூரை ஆங்­கி­லத்­தில் 'எக்­மோர்' எனக் குறிப்­பிட்டு வந்த நிலை­யில் இனி எழும்­பூர் என்றே மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் 'Tondiyarpet' என்று ஆங்­கி­லத்­தில் அழைக்­கப்­படும் தண்­டை­யார்­பேட்டை, இனி ஆங்­கில மொழி­யி­லும் 'Thandaiyaar pettai' என்றே உச்­ச­ரிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. திரு­வல்­லிக்­கேணி என்­பதை 'டிரிப்­ளி­கேன்' என எழு­தா­மல் திரு­வல்­லிக்­கேணி என்றே ஆங்­கி­லத்­தி­லும் எழு­த­வேண்­டும்.

இதே­போல் புர­சை­வாக்­கம், வேப்­பேரி, வ.உ.சி.நகர், கொடுங்கை யூர், இருக்­கன்­சேரி, செஞ்­சேரி ஆகிய பெயர்­கள் தமி­ழில் உச்­ச­ரிப்­ப­து­போல் ஆங்­கி­லத்­தி­லும் உச்­ச­ரிக்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மாவட்ட ஆட்­சி­யர்­க­ளின் பரிந்து ரையின் பேரில் பெறப்­பட்ட பெயர் மாற்­றங்­கள் அரசு அமைத்த குழு வால் பரி­சீ­லிக்­கப்­பட்டு, சில மாற்­றங்­கள் ஏற்­கப்­பட்­டும் சில மாற்­றங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டும் உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.